|
சேருஞ்
சந்தன மகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு
மடியவர் வருந்தாரே. 5 |
2577.
|
ஊழி
யந்தத்தி லொலிகட லோட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
வந்தரத் துயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை
யின்பனெம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை யடையாவே. 6 |
உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய்
விளங்குபவர் எழுந்தருளிய,
ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும்
செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத்
தொழும் அடியவர்கள் வருந்தார்.
கு-ரை:
வேள்வித்தலைவன்-இயமானன். இருநிலனாய்த் தீயாகி
நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய்
ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி (அப்பர்) சிவனை நினையாத
உயிர்கள் அவ்வெட்டுருவங்கள் சிறந்த ஒன்று ஆமோ? கோட்டாறு;-
கோணிய கோட்டாற்றுக் கொச்சை (தி.2 ப.70 பா.2.) கோட்டாறு சூழ்
கொச்சை (தி.3 ப.89 பா.1).
6.
பொ-ரை: ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து
உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து அருட்கடலே!
எந்தையே என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணிபுரத்தை
மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய, யாழ்போலும் மொழியினை உடைய
உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய
சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழுதெழ வல்வினைகள் அடையா.
கு-ரை:
யுகாந்தகாலத்தில் வெள்ளம் உலகங்களைமூடி
அழிக்கும்போது தேவர்கள் சிவபெருமானைச் சரண்புகுந்தனர்
|