2578.
|
பேய்கள்
பாடப்பல் பூதங்கள் துதிசெயப்
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட
மாடும்வித் தகனாரொண்
சாய்க டான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
தொழுமவர் தளராரே. 7 |
2579.
|
இலங்கு
பூண்வரை மார்புடை யிராவண
னெழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவைத் தருள்செய்தார் |
என்பது வரலாறு ஓட்டந்து-ஓட்டம்தந்து.
ஆழி-அருட்கடல். அந்தரம்-
வானம். இன்பன். ஆனந்தரூபன். மாநகர்-பெருங்கோயில்.
7.
பொ-ரை:
பேய்கள் பாடவும், பலபூதங்கள் துதிக்கவும்,
பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில், மூங்கில் போலும் தோளினை உடைய
காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர்
வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும், பல்வகை உயிர்கட்கும்
அவ்வற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத்
தொழுபவர் தளர்ச்சியுறார்.
கு-ரை:
பேய்கள் பாடவும் பூதங்கள் துதிக்கவும் காளி நாணவும்
மகாதாண்டவம் ஆடிய ஞான சொரூபர். சாய்கள்-புகழ்கள் இந்திரன்
தன் சாயாப்பெருஞ்சாய் கெடத் தாம்புகளால் தடந்தோள் போய்
ஆர்த்தவன் (கம்ப-யுத்த - நாக 21) தாய்களாயினார் பல்லுயிர்க்கும்-
(தாயவன் காண் உலகிற்கு), (அப்பர்) பல்லுயிர்க்கும் தாய்களாயினார்
தமை என்று மாற்றிக்கூட்டிச் சிவபெருமானை எனப் பொருளுரைக்க.
8.
பொ-ரை:
விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய்
மலைபோலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை
மலையை நிலைகுலையச் செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம்
|