|
புலங்கள்
செங்கழு நீர்மலர்த் தென்றன்மன்
றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே. 8 |
2580.
|
வண்டு
சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க்
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
வினையவை கூடாவே. 9 |
திருவடிவிரலால் நெரியச்
செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய
போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில்
முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றினிடைப்புகுந்து
இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர்
வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா.
கு-ரை:
நெரியக் கழலடியை வைத்து என்க. புலன்கள்-வயல்கள்,
கள்தேனுமாம் மன்றில் தென்றல்புகுந்து என மாற்றுக. குலம்-கூட்டம்.
மா-பெருமை.
9.
பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும்
நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும்
முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும்
தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு
அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும், பரமேட்டியும் ஆகிய சிவபிரான்
விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா.
கு-ரை:
பண்டுகண்டது காண்டல்-புதிதாக ஒன்றும் காணாமை.
அறியுந் தோறும் அறியாமைகாண்பது புதுக்காட்சி. அறியாமை
விலகாதிருப்பதே பண்டுகண்டது காண்டலாகும்.
|