2581.
|
பறித்த
புன்றலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின்
மூழ்கிட விளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
விட்டிடு மிகத்தானே. 10 |
2582.
|
பரசு
பாணியைப் பத்தர்க ளத்தனைப்
பையர வோடக்கு
நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனைப் பணிவாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய
கையையும் உடைய சமணரும், உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும்
ஆடையை அணிந்த தேரரும், அறியமுடியாத தேவர் தலைவர்
எழுந்தருளிய, எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங்களில் மூழ்க
அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப்பாயும் வயல்கள்
சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும்.
கு-ரை:
மேதிகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்க.
வாளை கலங்கிப்பாயும் வயல், ஆவி-குளம், வெறித்து-கலங்கி, அஞ்சி.
11.
பொ-ரை: மழுவேந்திய கையனை, பக்தர்கள் தலைவனை,
படப்பாம்பு, என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய
நிமலனை, முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை, மணம் தரும்
மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை, தேவர்
|