பக்கம் எண் :

1034

பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார்.

     கு-ரை: பரசுபாணி-மழுவேந்தியகையன். பத்தர்கள் அத்தன்-
மெய்யன்புடையார்க்கு இறைவன். அத்தன்-கையகப்படுவோன் எனலுமாம்.
அக்கு-எலும்பு.

        மூவர் திருமுறைத் தலங்கள்

பொங்கிவரும் காவிரி நதிக்குவட பாலில்
     பொருந்தும்அறு பத்துமூன்று
புண்ணிய தலங்கள், தென் பாலில்நூற் றிருபதேழ்
     பூவிலுயர் பாண்டிநாட்டில்
தங்குபதி யீரேழு, மலைநாட்டில் ஒன்று, ஏழ்
     தலங்கொங்கில், நடுநாடதில்
சாருமிரு பானிரண்டு, ஈழத் திரண்டு, ஒன்று
     தலமுறுந் துளுவமதனில்,
துங்கமுற வெண்ணான்கு நற்பதிக ளாகும் உயர்
     தொண்டைநா டதனின், வடபால்
தொல்பதிக ளைந்து, இவைகள் மூவர்பா டியதலம்
     சொல்லினம் உளவனந்தம்
திங்களொடு கங்கைபுனை யுஞ்சடை யசைந்திடத்
     திருநடம் புரிசரணனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
     செகதீச நடராசனே.

                         -ஸ்ரீ சிதம்பரநாத முனிவர்.