பதிக
வரலாறு:
அம்பர்மாநகர்
மாகாளத்தை வழிபட்ட திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனார் திருநாவுக்கரசுநாயனாருடன் வாழ்ந்திருந்த பொழுது பாடிய
திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
239 |
|
பதிக
எண்: 103 |
திருச்சிற்றம்பலம்
2583.
|
புல்கு
பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க்
கருவினை யடையாவே. 1 |
1,
பொ-ரை: பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம்
பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய
பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர்
மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள்
அடையா.
கு-ரை:
அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப்பகல்
இடைவிடாமல் வழிபடும் அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள்
நீங்கிப்போம்.
அவை
மீண்டும் அவரை அடைய வல்லன அல்ல. அல்லும்
நண்பகலும் தொழும் அடியவர்:- கங்குலும் பகலும் தொழும் அடியவர்
(பா.4.)
|