2584.
|
அரவ
மாட்டுவ ரந்துகில் புலியதள்
அங்கையி லனலேந்தி
இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள்
இசைவன பலபூதம்
மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்றலைப் படுவாரே. 2 |
2585.
|
குணங்கள்
கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை யடையாவே. 3 |
2.
பொ-ரை: பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர், புலித்தோலை
ஆடையாக உடுப்பவர். அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில்
ஆடுபவர், அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள்
பாடித்துதிக்கின்றன. வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும்
அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமாகாளத்தில் உறையும்
அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை
அடைவர்.
கு-ரை:
பாம்பாட்டுபவர். புலித்தோல் உடுப்பவர். கையில் எரி
ஏந்துவர். ஏந்தி இரவில் ஆடுவர். இவர் சரிதைகள் இவை. இசைவன-
இசைபாடுவன. தலைப்படுவார்-அடைவார்.
3.
பொ-ரை: அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை
எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின், பூதகணங்கள்
பாடவும், அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீ்ற்றிருக்கும் அப்பெருமான்நம்,
கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான். அவ்விறைவன் மேவிய
திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச்
செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா.
|