பக்கம் எண் :

1037

2586.







எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
     இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
     தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
கங்கு லும்பக லுந்தொழு மடியவர்
     காதன்மை யுடையாரே.           4
2587.







நெதிய மென்னுள போகமற் றென்னுள
     நிலமிசை நலமாய
கதிய மென்னுள வானவ ரென்னுளர்
     கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
     டேத்துதல் புரிந்தோர்க்கே.       5


     கு-ரை: கணங்கள் பாடவும், தரிசித்தோர் வாழ்த்தவும் அவரவர்
கருத்தை அறிந்து அருளும் சிவபிரான் எழுந்தருளிய அரிசிற்கரை
மாகாளத்தை வணங்கும் உள்ளத்தொடும் சேர வல்லவர்களை அடையும்
வன்மை வினைகளுக்கு இல்லை.

     4. பொ-ரை: மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும்,
அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால்
கட்டிய மணம் கமழும் கொன்றைமாலை, தாமம், கண்ணி ஆகியவற்றை
அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர்
எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர்.

     கு-ரை: எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணி எய்திலர். கெடுதலிலர்.
தொங்கல்-மாலை, தாமம்-தார், காதன்மை-காதலின் இயல்பு.

     5. பொ-ரை: திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும்,
அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப்
பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும்
சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும்