2588.
|
கண்ணு
லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினி லுயர்வரே. 6 |
|
|
2589.
|
தூசு
தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய |
திருவருளினும்
வேறுநிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள்
உலகில் உண்டோ?
கு-ரை:
நெதியம்-நிதியம். மதியம்-தோய்புனல். கதியம்-வழி.
மாகாளத்துப் பரசிவனைப் புதுப்பூக்கள் சந்தனம் தூபம் (முதலியவை)
கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியத்தை உடையவர்க்கு
அச்சிவபூஜையால் எய்தும் திருவருளினும் நிதியம் சுகபோகம் வேறு
என்ன இருக்கின்றன?
6.
பொ-ரை: கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள்
தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில்
சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே
கொண்டு வழிபடுபவர் யாவரோ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர்.
கு-ரை:
கண் உலாவிய கதிர் ஒளிமுடி:- செஞ்சடை முடியின்
ஒளியை உணர்த்திற்று. திலதம்-திலகம். வைத்தவர்-சிவபிரானார். உள்-
மனத்தில். நிலாம்-நிலாவுகின்ற.
7.
பொ-ரை: தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடையாகும்.
கொன்றையே அவர்தம் கண்ணி, பூசுவது வெண்பொடி. புகழை விரும்புபவர்.
அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில்
பெருமையைப் பெறுவர்.
|