பக்கம் எண் :

1039

  மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற்
     பெருமையைப் பெறுவாரே.          7
   
2590. பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப்
     பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
     விறையவ னுறைகோயில்
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை
     கனலிடைச் செதிளன்றே.           8
   

2591.

உய்யுங் காரண முண்டென்று கருதுமி
     னொளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும்
     பரவநின் றவர்மேய


     கு-ரை: தூசு-உடை. அரையில் தோலுடையே தூசு- கொன்றையே-
கண்ணி. பூசுவது வெண்பொடி, புரிந்தவர்-விரும்பினவர். மாசு-மேகம்.
யாவர்? அவர் பெருமை பெறுவார் என்க.

     8. பொ-ரை: கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக்
கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள்
தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம்.
அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின்
வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும்.

     கு-ரை: பவ்வம் ஆர் (கடல்)-நீர்க்குமிழி நிறைந்த; நுரையும் ஆம்.
‘நுரை மொக்குள் பௌவத்தோடு நொவ்விய புற்புதங்கள் திரைகொள்
நீர்க்குமிழி ஐந்தாம்’ (சூடாமணி நிகண்டு. 5. பெயர்ப் பிரிவு. 2.5.)
மவ்வம்-மேகம். அழகு (தோய்பொழில்) எனல் பொருந்தாது. (தமிழ்
லெக்ஸிகன, பக். 3112). கவ்வை-தோத்திர முழக்கம். தீயிற்பட்ட மரத்தூள்
போல வினை அழியும்.

     9. பொ-ரை: கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள்.
நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர்