பக்கம் எண் :

1040

மையுலாம்பொழி லரிசின் வடகரை
     வருபுனன் மாகாளம்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
     கவலையுங் களைவாரே.           9
2592.







பிண்டி பாலரு மண்டைகொ டேரரும்
     பீலிகொண் டுழல்வாரும்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங்
     கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
     பரவுதல் செய்வோமே.           10


பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார்.
அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும்
இலராவர்.

     கு-ரை: அவலமும், பிணியும், கவலையும் (ஆக்கும் பிறவியைக்)
களைவார் மாகாளத்தைத் தொழுவாரே. அடியார்க்கே அவற்றைக்களையும்
நிலைமை உண்டு. உய்யும் காரணம் அவர்க்கு உண்டு என்று நீவிர்
கருதுமின்.

     10. பொ-ரை: மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து
காப்பவரும், மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும்,
பீலிகொண்டு உழல்வோரும், கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு
கூறுவோரும், கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர்
புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை
முற்பிறவிகளில் நாம் செய்தபாவங்களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல்
செய்வோம்.

     கு-ரை: பிண்டிபாலர்-தலையிலே பீலி கட்டப்பட்டு, எறிகின்ற
படையான பிண்டிபாலத்தை ஏந்திய ஒருவகைச் சமணர், “பெருவலியதனை
நோனான் பிண்டிபாலத்தை யேந்தி” சிந்தா. 2269. என்பதன் உரையில்
நச்சினார்க்கினியர் எழுதியதைக் காண்க.