பதிக வரலாறு:
தோணிபுரத்தோன்றலார்
அருந்தமிழ் மாமறைபாடிக்
கோடிக்குழகரைக் கும்பிட்டுத் தொண்டர்களோடு திருக்கடிக்குளம்
புகுந்து பரவியது இத்திருப்பதிகம.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
240 |
|
பதிக
எண்: 104 |
திருச்சிற்றம்பலம்
2594.
|
பொடிகொண்
மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு
குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே. 1 |
1.
பொ-ரை: திருநீறணிந்த மேனியராய், வெண்ணூல் அணிந்தவராய்,
புலித்தோலுடுத்தவராய், யானைத்தோலைப் போர்த்தியவராய், விடைக்கொடி
உடையவராய், கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக், கால்களில்
சுழல் சிலம்பு ஆகிய ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்தன
கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து
வணங்கும் அடியவரைப் பழவினைகள் தொடரா.
கு-ரை:
கடிக்குளத்தில் எழுந்தருளிய கற்பகத்தைத் தலை சாய்த்துத்
திருவடியை வணங்கும் அடியார்களை வினைகள் சூழமாட்டா.
கற்பகம்-இத்தலத்தில்
இறைவன் திருநாமம்.
|