2597.
|
நீர்கொ
ணீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்
பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே. 4 |
2598.
|
சுரும்பு
சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழனாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்றக் |
விளையாட, உமை நங்கையைப்
பாகமாகக் கொண்டு, தழல் போன்ற
சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும்
கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும்
அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா.
கு-ரை:
கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகத்தை எவ்விடத்தும்
வழிபட்டு இன்பத்தை அடையும் அடியார்களை இடும்பைகள் வந்து
அடையமாட்டா.
4. பொ-ரை:
கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை, முத்துக்களின்
கொத்தாய் விளங்குவோனை, உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள்
வந்து தொழும் பவளத்தை, பசும் பொன்னை, வானளாவிய மேகங்கள்
தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில்
உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட்செல்வங்களை ஏத்த
வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம்.
கு-ரை:
திருக்கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தின்
செல்வங்களைப் புகழவல்லவருடைய வினைகள் தேய்ந்தொழிவது உறுதி.
செல்வங்கள்:- அவளால்வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
(சித்தியார் 89).
5. பொ-ரை:
வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த
சடையினனும், கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப்
|