|
கரும்பு
கார்மலி கொடிமிடை கடிக்குளத்
துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர்
விதியுடையவர்தாமே. 5 |
3599.
|
மாதி
லங்கிய பாகத்தன் மதியமொ
டலைபுன லழனாகம்
போதி லங்கிய கொன்றையு மத்தமும்
புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே. 6 |
பொருத்திவைத்த முடியினனும்,
அரும்புகளையும் மகரந்தம் விரிந்து
அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற, கரும்புகளும்
உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும்
கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ்
உடையவர் ஆவர்.
கு-ரை:
அரும்புகள் தாது அவிழ்ந்து விரிந்த பல மலர்களைக்
கொண்டு அடியவர்கள் வழிபடக் கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகம்.
கரும்புகளும் மேக மண்டலத்தை அளாவிய கொடிகளும் பின்னிய
கடிக்குளம்.
மனமகிழ்ந்து
தோத்திரம் சொல்லும் அடியவர்கள்
செல்வமுடையவராவார்கள் விதி-செல்வம்.
6.
பொ-ரை: உமைமாது விளங்கும் பாகத்தினனும், திங்கள்,
கங்கை, சினம் மிக்க பாம்பு, கொன்றைமலர், ஊமத்தை மலர்
ஆகியனவற்றை வளைந்த சடையின் மேல், அழகுறச் சூடியவனும்
காதிலங்கு குழையினனும், ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின்
பாதங்களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு
கெடும்.
கு-ரை:
கற்பகத்தின் திருவடியைக் கைகூப்பித் தொழவல்லவர்
வினைகள் முழுதும் கெட்டொழியும்.
|