பக்கம் எண் :

1047

2602.







நீரினார் கடற் றுயின்றவ னயனொடு
     நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
     பவளத்தின் படியாகிக்
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத்
     துறையுங்கற் பகத்தின்றன்
சீரினார்கழ லேத்தவல் லார்களைத்
     தீவினை யடையாவே.                 9
2603.







குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
     குறியினி னெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
     கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
     துறைதரு மெம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
     தூநெறி யெளிதாமே.                 10


     கு-ரை: மடுத்த- (பகைவர் உடம்பின்) உட்புகுத்திய. இற முரிய.
அருட்கூத்தன்-ஞானநாடகமாடும்பிரான். குணம்-எண்குணம்.

     9. பொ-ரை: நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும்,
பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து, மண்ணுலகில் அடித்தளம்,
விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த்
தோன்றி, மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும்
கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை
அடையா.

     கு-ரை: கடல் துயின்றவன்-பாற்கடலில் யோக நித்திரை செய்யும்
திருமால். விசும்பு-ஆகாயம். படி-உருவம், கற்பகத்தி்ன் கழல்
ஏத்தவல்லவர்களுக்கு வினை இல்லை.

     10. பொ-ரை: குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர்
தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள். அவர்தம் பொய்யுரைகளைக்
கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர். விடம்