2604.
|
தனமலி
புகழ் தயங்குபூந் தராயவர்
மன்னன்நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கட லோதம் வந்துலவிய
கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ
யிறைவனோ டுறைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
|
உண்டகண்டரும் திரிபுண்டரம்
அணிந்த நன்மேனியரும் ஆகிய
கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத்
தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம்.
கு-ரை:
குறி-குறிக்கோள். தொண்டர் தொண்டர்-தொண்டர்க்குத்
தொண்டர். தூநெறி-திருநெறி, சிவநெறி.
11.
பொ-ரை: செல்வவளம் மிக்க புகழ் விளங்கும்
பூந்தராய்
மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு
புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு,
கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு
கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு
உறைவார்கள்.
கு-ரை:
செல்வமும் மிக்க புகழும்: மாலது-அன்பு. கனம்-மேகம்.
இனம்-அடியார்கூட்டம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
கண்ணார்ந்த
திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளமிறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.
-சேக்கிழார்.
|
|