பதிக
வரலாறு:
நாகைக் காரோணத்தை
வழிபட்டுவருங் காழிவேந்தர் கீழ்வேளூர்
விமலரையுந் தரிசித்துப் பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
241 |
|
பதிக
எண்: 105 |
திருச்சிற்றம்பலம்
2605.
|
மின்னு
லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
யோடிட வீடாமே. 1 |
2606.
|
நீரு
லாவிய சடையிடை யரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
மணிசிலம் பவையார்க்க |
1.
பொ-ரை: மின்னலைப்போல ஒளிவிடும் சடையினரும்,
விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை
ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும்
ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு
வினைகள் நீங்க வீடு கிட்டும்.
கு-ரை:
உன்-உன்னுதல். திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு
வினையில்லை. வீடுண்டு என்று அருளியது, இவ்வூர்ப்பெருமான்
திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை உலகோர்க்கு
உணர்த்துவதாகும்.
2.
பொ-ரை: கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை
ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய
|