பக்கம் எண் :

1050

ஏரு லாவிய விறைவன துறைவிட
     மெழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
     பிணியொடு வினைபோமே.           2
2607.







வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
     வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
     பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
     கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா
     ருலகினி லுள்ளாரே.                3


உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும்
இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும். இத்தலத்தைச் சிந்திப்பவர்கட்குப்
பிணிகளும் வினைகளும் போகும்.

     கு-ரை: திருக்கீழ்வேளூரைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும்
வினைகளும் போம்.

     3. பொ-ரை: வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த
விரிசடையில் அரவு, வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை
அணிந்து, இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள்
நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும்
பெண்ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில்
நிலைபெற்றிருப்பர்.

     கு-ரை: கீழ்வேளூரில் பெருந்திருக்கோவிலில் எழுந்தருளிய
அம்மையப்பரை உள்கும் பயிற்சி உடையார் எவ்வுலகில் இருப்பினும்
சிவலோகத்தில் இருப்பவரேயாவர்.

    ‘நரகம்புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே’ திருவாசகம்.
6-2.