2608.
|
சேடு
லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே. 4 |
2609.
|
துன்று
வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே. 5 |
4.
பொ-ரை: பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி, மிக
அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த
கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமையோடு
திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான
பேரின்ப வாழ்வு பெறுவர்.
கு-ரை:
சேடு-பெருமை. பீடு-வலிமை. நீடு-அழியாமை. கீழ்வேளூர்ப்
பெருமானார் பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்ப
வாழ்வு மிகப் பெறுவர்.
5.
பொ-ரை: நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள், பிரம
கபாலம், கயிறு, மணிகள், தலைமாலை முதலியவற்றை அணிந்து, மன்றத்தில்
மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள்
விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள்
தேய்வது திண்ணம்.
கு-ரை:
நகுதலை-பிரமகபாலம். வடம்-கயிறு. சிரம்-
|