2610.
|
கொத்து
லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயின்மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய விடர்போமே. 6
|
2611.
|
பிறைநி
லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோளினர்
காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய வந்தணர்மலிதரு
பெருந்திருக் கோயின்மன்னு
நிறைநி லாவிய வீசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே. 7 |
தலைகள் திருக்கோயில்
மன்றத்துள் மாதவத்தோர் உலாவிய சிறப்பு
உணர்த்திற்று. சிரமாலையையுடையவரும் மன்றுள் நடமாடியவரும்
ஆகிய மாதவர் எனச் சிவபெருமானைக் குறித்ததாயின் நிமலன் என்னும்
ஒருமைக்கு ஏலாது.
6.
பொ-ரை: பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும்,
கூத்தனும், நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி
வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும், முத்துப்
போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய
பெருமானை ஏத்துமின். வலிந்துவரும் இடர்போகும்.
கு-ரை:
கொத்து-பூங்கொத்துக்கள். தொத்து-கூடுதல். பித்து-
திருவடிப்பற்று. முத்து.........வித்து-முத்தினைப் பவளத்தை வித்தாம்
முளையாகும் வேரேதானாம்.
7.
பொ-ரை: பிறையணிந்த சடைமுடியில் கங்கை, வன்னி
ஆகியவற்றை அணிந்தவனும், கறைக் கண்டனும், எண்தோளினனும்
ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும்
|