2612.
|
மலைநி
லாவிய மைந்தன்அம் மலையினை
யெடுத்தலு மரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர்கா தல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய வீசனை நேசத்தா
னினையவல் வினைபோமே. 8 |
2613.
|
மஞ்சு
லாவிய கடற்கிடந் தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவொடும் |
ஆகிய கீழ்வேளூர்ப்
பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவினனாய்
விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும்.
கு-ரை:
மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
என்றதால், அக்காலத்து வேதியர் சிறப்பும் அவர்க்குள்ள கோயில் வாழ்வும்
புலப்படும். நிறை-குறைவிலா நிறைவு, அவ்வத்தேவரை அவ்வப்புவனத்தில்
அவரவர்க்கு உரிய தொழிலில் நிறுத்துவதுமாம்.
8.
பொ-ரை: திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும்,
அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை
ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும், கலைகள் அனைத்தையும்
ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப்
பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய
வல்வினைபோகும்.
கு-ரை:
மைந்தன்-வீரன், அழகன், வலியன், மலைநிலாவிய
மைந்தன்-மலைபோலுந் தோற்றமுடைய (ஞான) வீரன். பத்துத் தலைகளும்
என்னத் தலையெலாம் என்று குறித்தருளினார். தலைநிலாவிய
நாவினர்-வேதாகமாங்க பிராணேதிகாசாதி சகல கலைகளுமுணர்ந்த நாவினர்.
9.
பொ-ரை: மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும்
திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண
|