பக்கம் எண் :

1054

  செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ்
     மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
     நடலைகள் நணுகாவே.           9
2614.







சீறு லாவிய தலையினர் நிலையிலா
     வமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
     சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
     பெருந்திருக் கோயின்மன்னு
பேறு லாவிய பெருமையன் றிருவடி
     பேணுமின் தவமாமே.
           10


இயலாதவனும், பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி
பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும்
நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள்
நம்மை அடையா.

     கு-ரை: கடல்-பாற்கடல். காண்பு-பார்வை. ‘காண்பினொடு
நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்’ கண்கள் காண்பு ஒழிந்து’ 2.97-5.

     10. பொ-ரை: மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல்
உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின்
பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள்
சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும்
அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான்
திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும்.

     கு-ரை: சீறு-முதனிலைத் தொழிலாகுபெயர். சீவரார்-துவரூட்டிய
சீலையர் (தேரர்). வீறு-பெருமை, வெற்றியுமாம். பேறு-ஆன்மாக்களுக்குரிய
பேறு (சிவானந்தம்). பேறு உலாவிய பெருமையன். ஆனந்தம் நிகழும்
பெருமையையுடைய பரமசிவன்.