பதிக
வரலாறு:
திருநல்லூரில்
மீண்டும் வந்து அணைந்து வணங்கி மகிழ்ந்த
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருவலஞ்சுழியில் எழுந்தருள்வதை
அறிந்த அத்தலத்து மெய்யன்பர்கள் எதிர் கொண்டனர். சூழ்ந்தனர்,
அச்சூழல் வெண்மதியை வெண்மேகக் கூட்டம் சூழ்ந்த காட்சிபோலிருந்தது.
கலந்த அன்பர்கள் தொழுதெழுந்தனர். கவுணியர் தலைவர்
கும்பிட்டுக்கொண்டே திருவலஞ்சுழிக் கோபுரத்தை இறைஞ்சிக் கோயிலுள்
புகுந்தார். புக்க அப்பெரியோர் சிவபிரானை வினவும் பொருளுடையதாகப்
பாடியது ஊனமில்லாத இசையுடன் விளக்கிய இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
242 |
|
பதிக
எண்: 106 |
திருச்சிற்றம்பலம்
2616.
|
என்ன
புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடு மதனாலே. 1 |
1.
பொ-ரை: முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த
நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும்,
அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல்
சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ!
எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?
கு-ரை:
நெஞ்சமே! நீ (இவ்) வையத்து, திருவலஞ்சுழி வாணனை
வாயாரப்பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே என்ன
புண்ணியஞ் செய்தனை? புண்ணியஞ் செய்ததா அன்றா என்னும் ஐயம்
இல்லை. பல்வகைப் புண்ணியத்துள் இவ்வழி
|