பக்கம் எண் :

1058

2618.







திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
     விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
     மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
     வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயக னிமையவ ரேத்திய
     விணையடித் தலந்தானே.      3
2619.



கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
     அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
     தினிதருள் பெருமானார்


     3. பொ-ரை: திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு
எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய
பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத்
தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி
செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு
மருந்தும் மந்திரமும் ஆவன.

     கு-ரை: திருந்தலார்-பகைவர். விறல்-பெருமை, வெற்றி. பரிந்து-
இரங்கி. பத்தி-சிவபக்தி. ‘பத்திவலையிற் படுவோன் காண்க’. மத்தம்-
மயக்கம். பிணியும் நோயும் மயக்கத்தால் வருவனவே. தெளிவு நோயை
விளைவிக்காது.

     இணையடித் தலந்தான் புரம்செறுவன, அடியாரைக்காப்பன பத்தியில்
வருவன. நோய்க்கு மருந்தாவன. மந்திரமாவன, என்க. அப்பர் அருளிய
‘சிந்திப்பரியன’ என்பது முதலிய இருபது திருவிருத்தங்களையும் இங்கு
எண்ணுக.

     4. பொ-ரை: நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ்
இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளியவரும்
ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க
நின்று ஆடும் அற்புதத்தையாம் இன்னதென அறியேம்.