பக்கம் எண் :

1059

மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
     யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
     வற்புத மறியோமே.               4
2620.







மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா
     மெரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர்
     பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
     பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ
     ரிணையடி தொழுவாரே.           5
2621.



ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
     மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
     பேய்களு மடையாளம்


     கு-ரை: கறை-நஞ்சாலாய கறுப்பு. கதிர்-சூரியன். அறத்திறம்-
தருமங்களின் வகைகளும் வேதாகம நூற்பொருளின் கூறுபாடும். கழல்
சிலம்பு-உம்மைத்தொகை.

     5. பொ-ரை: சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின்
வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற்
பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை
வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர்
அவர்தம் இணையடி தொழபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர்.

     கு-ரை: சிவபிரான் ஐம்பெரும் பூதரூபமாக உள்ளவர்.
அட்டமூர்த்தங்களுள் முதல் ஐந்து அம்மையப்பர்; அர்த்தநாரீச்சுவரர்,
பவள வண்ணர். நீங்காது வாழ்பவர்.

     6. பொ-ரை: அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும்
உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால்