பக்கம் எண் :

1060

அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
     தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
     வரிவளை கவர்ந்தாரே.           6
2622.







குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
     குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ
     ரிமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம்
     வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று
     சேயிழை தளர்வாமே.
           7


அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக்
கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும்
அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர்.

     கு-ரை: இறைவன் திருமேனிக்கு ஒப்புரைக்க வேறு யாதும்
இல்லாமையால் ‘ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர்’ என்க.
‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்
காட்டொணாதே (அப்பர்) அருவராதது - அருவருக்காதது. முறுமுறுப்பு,
சுறுசுறுப்பு, கிறுகிறுப்பு முதலியவற்றைப்போல ‘அறுவறுப்பு’ என்பதும்
உண்டு. மனத்தை அறுப்பதுபற்றிய பெயர், அஃது இடையெழுத்தாக
மருவிற்று. ‘அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி
வெளுத்துடலம் கோணாமுன் நெஞ்சமே. . . . .சாய்க்காடு கைதொழு நீ
சார்ந்து’ (க்ஷேத்திரவெண்பா. 15).

     7. பொ-ரை: அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு
முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல் வருபவர். இமையவர் அவர்தம்
ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர்
யாதென அறிகிலோம். பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி
சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள்.

     கு-ரை: இதிற் குறித்த குன்றியூர் எங்குளதோ? தெரிந்திலது., ‘வலம்
என்றதால் ‘இடம்’ இருத்தல் வேண்டும். தலைப்படல்-சேர்தல்.
‘தம்மிற்றலைப்பட்டார்’ (திருக்களிறு. 2.) சேயிழை-தலைவி.