2623.
|
குயிலி
னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே.
8 |
|
|
2624.
|
அழல
தோம்பிய வலர்மிசை யண்ணலு
மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே.
9 |
8.
பொ-ரை: குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும்
உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின்
இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும்
வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர்
காணார்.
கு-ரை:
கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும்
உமாதேவியாரைக் குறித்தன. வல்லவர் காண்பவர். அல்லவர்காணார்.
9.
பொ-ரை: நான்முகனும், திருமாலும் திருமுடியையும்,
திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர்
சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில்
ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார்
தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர்.
கு-ரை:
அழலது-தீ. கற்றாங்கு எரியோம்பிக் கலியைவாராமே
செற்றார். அண்ணல்-பிரமன். அரவணை-பாம்பாகிய படுக்கை.
துயின்றான்-திருமால். ஆயவர்-சிவபிரான்.
|