2625.
|
அறிவி
லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி
லளவறுப் பொண்ணாதே. 10 |
2626.
|
மாதொர்
கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை |
மழலை வீணையர்-மிக
நல்ல வீணைதடவி, பாதத்தால் சுழலும்
மாந்தர்கள் - திருக் கோயிலை வலம் வரும் அன்பர்கள். தொல்வினை-
சஞ்சித கர்மம்.
10. பொ-ரை:
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து
கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக்
கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப்
பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும்.
கு-ரை:
தவம் புரிந்து அவம் செய்தல்-மேற்கொண்ட தவத்திற்கு
ஒவ்வாத பாவச்செய்கையை உடையராதல். நெறி அல்லாதவற்றைப்
போதிப்பர். தேறல்மின்-தெளியத்தக்கன அல்ல என்று தெளியாது ஒழிமின்.
பிறிவு இல்லாதவர்- இடைவிடாமல் வழிபடும் அடியர்.
11.
பொ-ரை: மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும்
மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய
இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக்
கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை
எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா.
கு-ரை:
கூறன்-பாகத்தன். மருந்து-பிறவிநோய் தீர்க்கும்
|