திருஞானசம்பந்தர்
புராணம்
புலன்கொள்
இன்தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப் பதியினில் இருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெரு மான்தொண்டர் தம்முடன் மகிழ்ந்தார்.
மதிபு னைந்தவர்
வலஞ்சுழி மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்தம் முன்வந்(து)
எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல் மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை சூழ்ந்தெனக் கலந்தார்.
மருவ லார்புரம்
முனிந்தவர் திருமுன்றில் வலங்கொண்(டு)
உருகும் அன்புடன் உச்சிமேல் அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும் ஆதர வுடன்பணிந் தெழுந்தனர் பெரியோர்.
-சேக்கிழார்.
|