பக்கம் எண் :

1064

107. திருக்கேதீச்சுரம்

பதிக வரலாறு:

     ஞானவேந்தர் திருவிராமேச்சுரத்தை நண்ணிப் பாண்டியனும்
மங்கையர்க்கரசியம்மையாரும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ வழிபட்டுக்
கொண்டு பலநாள்கள் இருந்தனர். வழக்கம் போலக் கடற்கரையில்
இனிதிருந்த ஒருநாள் ஈழநாட்டுத் திருக்கோணமலையைப் பாடிப்
பணிந்தார். அப்போது மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சுரத்தைப்
பரவினார். அதுவே இத்திருப்பதிகம்.

                  பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 243   பதிக எண்: 107

                  திருச்சிற்றம்பலம்

2627.







விருது குன்றமா மேருவில் நாணர
     வாஅனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
     றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
     பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
     கடுவினை யடையாவே.           1


     1. பொ-ரை: வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை
வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக்
கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றிநின்று உறையும்
பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர், ஆரவாரிக்கின்ற கடலால்
சூழப்பட்ட, மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில்
பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக்
கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா.

     கு-ரை: விருது-வெற்றி. அடையாளம் மாமேருகுன்றம் வில்
ஆ-மகாமேருமலை வில்லாக. மாதோட்டம் என்பது தலப்பெயர்,
கேத்தீச்சுரம் என்பது திருக்கோயில். மகாதுவட்டாபுரம் என்பதன்