பக்கம் எண் :

1065

2628.







பாடல் வீணையர் பலபல சரிதையர்
     எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
     சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில்
     எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக்
     கெடுமிடர் வினைதானே.             2
2629.







பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
     அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
     அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
     உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
     கருவினை யடையாவே.
             3


திரிபன்று. அங்குப்பொழிலணி மாதோட்டம் உளது. இக்கேதீச்சுரத்தில்
‘கேது’ இருப்பதை இன்றுங்காணலாம். இத்தலத்தை வழிபடுவோர்
வினைகளும் நோய்களும் தீரப்பெற்றின்புறுவர் என்பது திண்ணம்.

     2. பொ-ரை: வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான
புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய
நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை
உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய
கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும்
கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினைகெடும்.

     கு-ரை: சரிதையர்-ஒழுக்கத்தவர். உகைத்து-செலுத்தி. இருள்-
இருண்ட. ஈடம்:- முதல் நீட்சி.

     3. பொ-ரை: உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறை
தவழ் சடையின. திருநீற்றை விரும்பிப்பூசி. கழலும் சிலம்பும் ஆர்க்க
ஆடுபவர். பாடுபவர், உண்ணும் இச்சை உடையவர் போல