பக்கம் எண் :

1066

2630.







பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
     விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
     மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
     பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல்
     மொய்த்தெழும் வினைபோலார்தம்மேல்மே.  4
2631.



நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம்
     மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
     மலிகடல் மாதோட்டத்


வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர். அவ்விறைவர் எழுந்தருளிய
உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடைபவரை
இருவினைகள் அடையா.

     கு-ரை: சுண்ணம்-திருவெண்ணீறு. பிச்சைக்கு இச்சை:- ‘தந்த
துன்றன்னைக் கொண்டதென்றன்னை’ என்றகருத்தும் ஈண்டுப் பொருந்தும்.

     4. பொ-ரை: திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர்.
விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர். முப்புரி
நூல் அணிந்தவர். மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த
மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி
எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும்
அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும்.

     கு-ரை: பொடி-திருநீறு. இலைவேல்-முத்தலைச் சூலம். அடிகள்-
சிவபெருமானை. பரிந்த-அன்பு கொண்ட.

     5. பொ-ரை: மிகவும் நல்லவர். ஞானம் நன்கு உடையவர். தம்மை
அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர். மண்ணுலகிலும் விண்ணுலகிலும்
பிறத்தல் இறத்தல் இல்லாதவர்: நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட
மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய