|
தெல்லை
யில்புக ழெந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே.
5 |
2632.
|
பேழை
வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே. 6
|
எந்தையாகிய அவரது
கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித்
துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும்
அன்புடையவரே அடியவர் ஆவர்.
கு-ரை:
ஆற்றவும்-மிகவும். அருள் ஈய வல்லர். பார்மிசைவான்-
மண்ணிலும் விண்ணிலும். எல்லை-அளவு. அல்லல்-துன்பம். ஆசு-குற்றம்.
6.
பொ-ரை:
பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண்
பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் திருமேனியின்
ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய
உமையம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத்
தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய
மாதோட்டத்தில், பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள
அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு
கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார்.
கு-ரை:
பேழை:- பெருமை, பேழைப் பெருவயிற்றோடும் புகுந்து
என் உளம்பிரியாந் (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 4)
பெருந்திரு மகள்-கங்கை. மாழை-அழகு. இங்கு மாதோட்டம் என்பதன்
விளக்கம் உளது. கேழல் பன்றி, மருப்பு-கொம்பு.
|