2633.
|
பண்டு
நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே
தீச்சர மதுதானே. 7 |
2634.
|
தென்னி
லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன்
முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே. 8
|
7.
பொ-ரை: முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப்
பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை
அமைத்தருளிய நாதனார், கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு
கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும்,
சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும்
மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும்
கேதீச்சரமாகும்.
கு-ரை:
பல உலகங்களிலும் உடம்போடு உயிர்வாழ்க்கையை,
அவ்வவ்வுயிர்களின் கன்மத்திற்கேற்ப அருளிய முதல்வன் பரமசிவனே
என்றதாம். பண்-பண்ணிசை. மஞ்ஞை-மயில்.
8.
பொ-ரை: தென்னிலங்கை மன்னனாகிய இராவணன்
கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன்முடி, தோள் ஆகியன
அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள்செய்த
தலைவனார், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட
நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து
உள்ளார்.
|