பக்கம் எண் :

1069

2635.







பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
     புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
     வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
     தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
     திருந்தஎம் பெருமானே.           9
2636.







புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
     புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
     ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து
     போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
     தீச்சரம் அடைமின்னே.
          10


     கு-ரை: குலபதி-குலத்திற்குத் தலைவன். நலிந்து-நெருக்கி. அடர்த்து
அவனுக்கு அருள் செய்த தலைவனார். உன்னி-தியாநித்து.

     9. பொ-ரை: மா, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட
நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும்
எம்பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல்
வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து
ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன்
திறமை யாதோ? இஃது எதிர் நிரல் நிறை.

     கு-ரை: பூலுளான்-பிரமன். புவி-பூமி. இடந்து-பேர்த்து. இடந்தவன்
மாயன். ஓடியவன் அயன். நுன் அடியிணை-உன்னுடைய திருவடிகளிரண்டும்
வித்தகம்-சாதுரியம். மா. பூகம் (பாக்கு), கதலி எல்லாம் உள்ளது
அம்மாதோட்டம். தேவி-கௌரி (திருக்கேதீச்சரமான்மியம். பகுதி 1.பா.36.)

     10. பொ-ரை: புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும்
புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய்