பக்கம் எண் :

1070

2637.







மாடெ லாமண முரசெனக் கடலின
     தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத்
     தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
     நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள்
     பரகதி பெறலாமே.                11

 
                     திருச்சிற்றம்பலம்


நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக்
கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை
உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல்
விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள்.

     கு-ரை: ஆதர்-அறிவிலார், எத்தர்-ஏமாற்றுவோர், விரகுள்ளவர்,
ஏழைமை-அறியாமை தோற்றும் சொற்கள். மறுகிட-கலங்க. பாலாவி-
அத்தலத்தின் தீர்த்தம். அது மிகப்பெரியது.

     11. பொ-ரை: அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல்
ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய
தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத்
தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய
இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம்.

     கு-ரை: மணமுரசு:- வீரமுரசு, தியாகமுரசு, என்னும் மூவகையுள்
ஒன்று. ‘இமிழ்குரல் முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ்கெழுகூடல்
தண்கோல்வேந்து’ (புறம் 58) ‘வம்மின் எனப்புலவோரை அளித்திடுவண்
கொடைமுரசு. . . மணமுரசு. . . திறல்முரசு’ (முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழ். 8) ஆடல்-வெற்றி. காழிநாடுளார்க்கினற’ ஆசிரியர்.
பரகதி-சிவானந்தப் பேறு அடையும் நெறி.