பக்கம் எண் :

1073

2641.







பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
     பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
     கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம்
     விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி
     தீவினை கெடுமாறே.             4
2642.



கடிய ஏற்றினர் கனலன மேனியர்
     அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
     தடியவர் மேலுள்ள


     கு-ரை: வலங்கை:- வலக்கை இடக்கையென்றலே குற்றமில்லாதது.
வேடம்-சிவவேடம். பிரிவிலாதவர்-மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும்
நீக்கமின்றி நினைத்தும் போற்றியும் வழிபட்டும் வரும் அடியார்.

     4. பொ-ரை: பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர்,
அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர்.
மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர்.
வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி
வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி
கெடும் வழி உண்டோ?

     கு-ரை: பாடுதலுடையார், ஆடுதலுடையார், மரக்கலம், வேதங்களை
அருளிச்செய்த முதல்வன். இடைவிடாது நினைக்கும். சேர்தல்-இடைவிடாது
நினைத்தல் (குறள், 3 உரை). பிணியும் வினையும் கெடுமாறு, வீரட்டம்சேரும்
நெஞ்சினார்க்கே உண்டு. சேரும் என்பது எதுகைத் தொடைக்கு ஏலாது.

     5. பொ-ரை: விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர்.
கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய
மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள
தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி
வீரட்டத்தைப் பண்போடு பரவுமின், பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.