பக்கம் எண் :

1074

வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
     விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
     பற்றறும் அருநோயே.               5
2643.







பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
     கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
     அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி
     விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
     கிடர்கள்வந் தடையாவே.
            6
        * * * * * * * * *               7

     கு-ரை: ஏற்றினர்-எருதுடையவர். கனல் அன்ன மேனியர்:-
‘தீவண்ணர் திறம் ஒருகால் செப்பாராகில்’, ஊர் மூன்றும்-திரிபுரங்களும்.
வரை-மேரு. வெடிய-பகையாகிய, கேடாகிய அச்சத்தினைச் செய்யும்-
வீட்டுவிப்பான்- கொல்விப்பவன். படி-பண்பு. நோய் பற்று அறும்.

     6. பொ-ரை: மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான்
கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு
எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய,
விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை
எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.

     கு-ரை: கூறு-பாகம், மறி-மான். அன்பர்க்கு எளியவர் அல்லார்க்கு
அரியவர். ‘அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு
எளியான்’ ‘மெய்யடியவர்க்கு எண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு’,
(திருவாசகம்) விண்ணில் ஆர் பொழில் என்க. எண்-எண்ணுதல்.

     7. * * * * * * * *