2646.
|
பிண்ட
முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே. 10 |
|
|
2647.
|
விலங்க
லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை
எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே.
11
|
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
அறியாமை-அறியாதவாறு. ஆர் எரி-நிறைந்த தீ. வரைக்கரி-
மலைபோலும் யானை.
10.
பொ-ரை: அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை
உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும்,
பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய
சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி
வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க
குணமுடையோர் ஆவர்.
கு-ரை:
வார்த்தையை ஒரு பொருள் என்று கருதாதீர்கள். பரிவு
உறுவீர்-அன்புமிக்கீரே! அடி-திருவடிகளை.
11.
பொ-ரை: மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம்
எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை,
|