பக்கம் எண் :

1077

எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய
சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய
நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள்,
மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.

     கு-ரை: விலங்கலே (-மேருமலையே) சிலையெனவும்
(கயிலைமலையே) இடமெனவும் உடைய சிவன். எழில்-அழகு. நலம்-அழகு,
செறிவு முதலிய நலங்கள்.

        திருஞானசம்பந்தர் புராணம்

சொற்பொரு வேந்தருந் தோணி் மூதூர்த்
     தோன்றல்பின் காதல் தொடரத் தாழும்
பொற்புக லூர்தொழச் சென்றணைந்தார்;
     புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி
     விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும்
     பாடல் னான்மறை பாடிப் போந்தார்.

                               -சேக்கிழார்.