பக்கம் எண் :

1079

2649.







பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு
     மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
     மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
     கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
     அருள்பெறல் எளிதாமே.              2
2650.







நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
     அடியவர் தமக்கெல்லாம்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
     செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
     கொழுந்தே யென்றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
     டமர்ந்தினி திருப்பாரே.
              3


     2. பொ-ரை: தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும்
பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும்
உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான
தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும்
கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க
எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர்.

     கு-ரை: பங்கயம்-தாமரை. மயிலும் மொழிக்கு ஒப்பாக் கூறுவது
உண்டுபோலும். ‘குயில்மொழி’ ‘கிளிமொழி’ என்பனபோல மயில் மொழி
என்று கேட்டிலோம். மிழற்றிய-மெல்லச் சொல்லிய. குணலை-கூத்துள்
ஒன்று. சங்கை-சந்தேகம்.

     3. பொ-ரை: நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும்
அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய
நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித்
தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு