2651.
|
பலவு
நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னஞ்சேர்ந் தழகாய
குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்
கொழுந்தே யென்றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே. 4 |
2652.
|
உருகு
வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
பத்திசெய் தெத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவனருள் பெறலாமே. 5 |
மாகிய இறைவரைக்
கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார்
பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர்.
கு-ரை:
அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில்
தேவரோடும் குனிதிருப்பர்.
4.
பொ-ரை: பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும்
தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும்
விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும்,
கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும்
நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய்
இவ்வுலகில் புகழோடு வாழ்வர்.
கு-ரை:
பலவு-பல மரஞ்செடி கொடிகளும் கலவம்-தோகை. மஞ்ஞை
மயில். கிள்ளை-கிளி. நிலவு செல்வத்தர்-அழியாத ஐசுவரியமுடையவர்.
நீடிய-அழியாத.
5.
பொ-ரை: உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும்
தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே
|