பக்கம் எண் :

1081

2653.







துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
     துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
     புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
     கொழுந்தே யென்றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
     ஏதம்வந் தடையாவே.                6
2654.



மாட மாளிகை கோபுரங் கூடங்கண்
     மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
     பரிசொடு பயில்வாய


என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர்
நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள்
நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம்.

     கு-ரை: உள்ளம் உருகுவார்க்கு ஒளிவளர் விளக்கு,
அன்புடையடியார்க்கு உண் ஆரமுது பரிவும் பக்தியும் செய்து கோட்டூர்
நற்கொழுந்தே என்று எழுவார் வினைகள் விலகும். திருவருள் வாய்க்கும்.

     6. பொ-ரை: நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி,
ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும்,
தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக
ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள்
பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின்
திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும்
வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை.

     கு-ரை: கோட்டூர் நற்கொழுந்தே என்று எழும் அடியவரை என்றும்
வழிபடுவார்க்கு இடரும் கேடும் ஏதமும் இல்லை.

     7. பொ-ரை: மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம்,
அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம்