|
கூடு
பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
கெழுவுவர் புகழாலே.
7 |
2655.
|
ஒளிகொள்
வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
தவமுடை யவர்தாமே. 8
|
ஆகியவற்றோடு, அழகிய
பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும்
நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய
புகழ் உடையவராவர்.
கு-ரை:
மாளிகை, கோபுரம், கூடம், மணி அரங்கம், சாலை, பொன்
மண்டபம், மதில், பொழில், எல்லாம் கோட்டூர்ச் சிறப்பை உணர்த்தின.
கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையராவர்.
8.
பொ-ரை: ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட
இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன்
தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில்
அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும்
அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத்
தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர்.
கு-ரை:
வாள் எயிறு-வாள்போலும் கோரைப்பல். சுளிய-சுளிக்க,
வாளொடுநாள்-வாட்படையும் ஆயுளும். தளிர்கொள் தாமரைப் பாதங்கள்
அருளைப் பெறுதற்குரிய தவம்.
|