பக்கம் எண் :

1083

2656.







பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செய்யும்
     முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத்
     திருவினைத் தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற்
     கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
     நிகழ்தரு புகழாரே.                     9
2657.







கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
     கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
     மெய்யன்நல் லருளென்றும்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
     டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
     பெருமையைப் பெறுவாரே.
             10


     9. பொ-ரை: பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும்
முத்தும் பவளமும் போன்றவனை, திருமாலும், நான்முகனும் தேடியறிய
முடியாத திருவை, மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில்
விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வமும், உலகெலாம்
நிகழும் புகழும் அடைவர்.

     கு-ரை: பாடி ஆடுகின்ற உண்மையடியார்க்கு அருளும் முத்து, அரி
அயன் அறியாத திரு. மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூர்க்
கொழுந்தே என்று எழுவார்க்கு நீடிய செல்வமும் உலககெலாம் நிகழும்
புகழும் உண்டாம்.

     10. பொ-ரை: வளைந்த வெண்பிறையை அணிந்த
சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்திதுசராகிய, செழுமையின்
திரட்சியை, மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின்.
பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத
சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும்
அடியவர் பெருமையைப் பெறுவர்.