பக்கம் எண் :

1084

2658.









பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
     பாவையோ டுருவாரும்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
     கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
     பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லர்ந்தமிழ் மாலைகள் வல்லவர்
     தாங்குவர் புகழாலே.                11

       திருச்சிற்றம்பலம்



     கு-ரை: பூணல்-மலர்களாலும் ஆடை ஆபரணங்களாலும்
அலங்கரித்தல், அரனைப் பேணல்செய்து தொழும் அடியவர். பேணல்-பக்தி.

     11. பொ-ரை: பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும்
தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த
பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல்
அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய
திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர்
புகழ்பெறுவர்.

     கு-ரை: தேன்மொழிப்பாவை-இத்தலத்தில் உள்ள தேவியார்
திருப்பெயர். இதனை மதுரவசனி என்று பின்னோர் மொழி பெயர்த்தனர்.
கொந்து-பூங்கொத்து. சந்து-சந்தம். பாவண்ணம்.

        திருஞானசம்பந்தர் புராணம்

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
     நலங்கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
     பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
     ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
     திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

                                      -சேக்கிழார்.