பக்கம் எண் :

1085

110. திருமாந்துறை

பதிக வரலாறு:

     சைவமுதல்மறையோர் அன்பிலாலந்துறை முன்னவனைத் தொழுது
பதியும் பணிந்து வடகரை மாந்துறை அணைந்தார். வலஞ்செய்து
உள்புக்குத்தாழ்ந்து, பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலையைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                   பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 246   பதிக எண்: 110

                   திருச்சிற்றம்பலம்

2659.







செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
     செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
     குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல்
     ஏத்துதல் செய்வோமே.           1


     1. பொ-ரை: வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும்
ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர்,
குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள
மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை
ஏத்துவோம்.

     கு-ரை: வேங்கை பொன்போல் பூக்கும், வேங்கை முதலியவை
காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன.

     ஆரம்-சந்தனம், பொன் நேர்வருகாவிரி:- “பொன்னி”. 147