பக்கம் எண் :

1089

2666.







மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட
     மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை
     நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
     தீநெறி யதுதானே.               8
2667.







நீலமாமணி நித்திலத் தொத்தொடு
     நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
     மாந்துறை யமர்வானை
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா
     மலரடி யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
     கூற்றுவன் நலியானே.
           9


     8. பொ-ரை: மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து
வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை,
நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால்
விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர்.

     கு-ரை: மந்தம்-தென்றல். நிந்தியா-நிந்தித்து. சிந்தியா மனத்தார்-
சிந்திக்காத மனமுடையவர்.

     தீநெறி-நரகிற் செலுத்தும் தீயகதி.

     9, பொ-ரை: நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களையும்
அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும்
தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப்
பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான்.

     கு-ரை: நித்திலத்தொத்து-முத்துக்கொத்து. ஆலியா-