பக்கம் எண் :

1090

2668.







நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
     நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு
     நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
     அதுவவர்க் கிடமாமே.         10
2669.



வரைவ ளங்கவர் காவிரி வடகரை
     மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
     செழுமறை நிறைநாவன்


துளித்து. இணை-இரண்டு. நாளும்-நாடோறும். கோலம்-சிவக்கோலம்.
நலியான்-வருத்தமாட்டான்.

     10. பொ-ரை: சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர்.
நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக்கனி,
நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள
திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த
நிலையே மேலானது.

     கு-ரை: கழை-மூங்கில், கரும்பு-நறவு-மணம், கதலி-வாழை. பலம்-
பழம். ஒருகாலம் அன்றி:- எக்காலத்தும்.

     உள் அழிந்து எழும் பரிசு-நெஞ்சுருகி எழுகின்ற தன்மை. அது-
அப்பரமானந்தநிலை.

     11. பொ-ரை: மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி
வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய்,
சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு
செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு
பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப்
பெறுவர்.