|
உருத்திராக்ஷ
வடிவம்
அக்கமணி
யொருமுகம் சிவமிரண்டு மைமூன்ற
தங்கிநால் வதனமறையோன்
ஐந்துருத் திரனாறு முருகவேள் சேடனேழ்
ஐங்கரக் கடவுளெட்டாந்
தக்கவொன் பதுவடுக னரிபத்து வதனமாம்
சாற்றுபதி னொருமுகந்தான்
சதுமறைசொல் பதினோ ருருத்திரர்கள் பனிரண்டு
தானிரவி பதின்மூன் றுசேய்
மிக்கபதி னான்கது சிவஞ்சத்தி பதினைந்து
மேவுமுகம் விந்துநாதம்
வினவுமுச் சியிலொன்று நாலொன்ப தாஞ்சிரம்
வியன்கழுத் தெண்ணான்கதாம்
செக்கர்மணி பதினாறு கைக்குமார் பைம்பது
செவிக்காற தெனவுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே.
-ஸ்ரீ
சிதம்பரநாத முனிவர்.
|